அயோத்தியில் லதா மங்கேஷ்கர் பெயரில் சாலை: உ.பி முதல்வர் அறிவிப்பு

லக்னோ: இந்தியாவின் இசைக்குயில் பழம்பெரும் பாடகியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான லதா மங்கேஷ்கர் (92), கடந்த பிப்ரவரி மாதம் காலமானார். தற்போது அவரது நினைவாக அயோத்தியில் புதிய குறுக்குச்சாலை அமைக்கப்பட்டு, அவரது நினைவைப் போற்றும் வகையில் அந்த சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படுகிறது. இதற்கான உத்தரவை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார். இதற்கான முன்மொழிவை 15 நாட்களுக்குள் அரசுக்கு அனுப்பி வைக்கும்படி  அயோத்தி நகராட்சிக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: