×

மாணவர்களின் பிரச்னையை பேசும் ‘டான்’: சிவகார்த்திகேயன்

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படம் வருகிற 13ம் தேதி வெளிவருகிறது. இதையொட்டி அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்க வேண்டும், மக்களை ஏதோ ஒரு விதத்தில் சிந்திக்க வைக்க வேண்டும். இந்த மூன்று விஷயங்களை முன்வைத்துதான் எனது படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். டான் படமும் அப்படிப்பட்டதுதான். இதில் கல்லூரி மாணவர்களின் பிரச்னை பேசப்படுகிறது. பான் இந்தியா படங்கள் என்று தனியாக எதுவும் இல்லை. எந்த படம் மொழிகடந்து இந்தியா முழுக்க மக்களால் வரவேற்கப்படுகிறதோ அந்த படம் பான் இந்தியா படமாகிறது.

கொரோனா காலத்திற்கு பிறகு மக்கள் தியேட்டருக்கு அதிக அளவில் வரத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சினிமா வியாபாரமும் நன்றாக இருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் படங்கள் எடுத்தால் அந்த படம் லாபம் சம்பாதிக்கும் என்பதுதான் இப்போதுள்ள நிலை. ஓடிடி தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் எனக்கு இப்போதைக்கு ஓடிடி தள படங்களிலோ, வெப் சீரிஸ்களிலோ நடிக்கும் எண்ணம் சிறிதும் இல்லை. நான் பெரிய திரைக்காகவே சினிமாவுக்கு வந்தேன். அதில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. எனது படம் பல கோடி வசூலிக்கிறது என்பதற்காக சம்பளத்தை உயர்த்தவில்லை. என் உழைப்புக்கேற்ற நியாயமான சம்பளத்தையே பெறுகிறேன்.

Tags : Dawn ,Sivakarthikeyan , ‘Dawn’ talking about students ’problem: Sivakarthikeyan
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...