×

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலனுக்கு உலகின் புகழ்பெற்ற புலிட்சர் விருது!!

லண்டன் : தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட லண்டனைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலனுக்கு உலகின் புகழ்பெற்ற புலிட்சர் விருதை பெற்றுள்ளார்.உலகில் ஊடகத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. 105வது ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவைச் சேர்ந்த பூர்வீகமாக கொண்ட இரண்டு பத்திரிகையாளர்கள் புலிட்சர் விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரின் ஒருவரான மேகா ராஜகோபாலன் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இவர் சீனாவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் குறித்து ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டார். இதற்காக சர்வதேச பிரிவிலான ஊடகவியலாளர் விருதை மேகா ராஜகோபாலன் பெற்றுள்ளார். இதே போல் இந்தியாவை பூர்வீகக்குடியாக கொண்ட அமெரிக்க பத்திரிகையாளரான நெய்ல் பேடி என்பவர் உள்ளூர் செய்திக்கான பிரிவில் புலிட்சர் விருது பெற்றுள்ளார். நெய்ல் பேடி வெளியிட்ட புலனாய்வு செய்திகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  …

The post தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலனுக்கு உலகின் புகழ்பெற்ற புலிட்சர் விருது!! appeared first on Dinakaran.

Tags : Magha Rajagobalan ,Tamil Nadu ,London ,Megha Rajagobalan ,Nadu ,
× RELATED கேரள வாகனங்களுக்கு தமிழ்நாட்டில் வரி...