×

சூப்பர் ஜயன்ட்ஸ் பந்துவீச்சில் குஜராத் டைட்டன்ஸ் திணறல்

புனே: எம்சிஏ ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில், விருத்திமான் சாஹா களமிறங்கினர். சாஹா 5 ரன் எடுத்து மோஷின் கான் பந்துவீச்சில் வெளியேற, அடுத்து வந்த மேத்யூ வேட் 10 ரன், ஹர்திக் 11 ரன் எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். குஜராத் 9.1 ஓவரில் 51 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறிய நிலையில், கில் - மில்லர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தது. மில்லர் 26 ரன் (24 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் பதோனி வசம் பிடிபட்டார்.

கடைசி கட்டத்தில் கில் - ராகுல் திவாதியா இணைந்து ஸ்கோரை உயர்த்த போராடினர். பொறுப்புடன் விளையாடிய கில் 42 பந்தில் அரை சதம் அடித்தார். குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது. கில் 63 ரன் (49 பந்து, 7 பவுண்டரி), திவாதியா 22 ரன்னுடன் (16 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் அணிக்கு கடைசி 5 ஓவரில் மட்டும் 52 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. லக்னோ பந்துவீச்சில் ஆவேஷ் கான் 2, மோஷின் கான், ஹோல்டர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது.

Tags : Gujarat Titans ,Super Giants , Gujarat Titans stutter in Super Giants bowling
× RELATED கேப்பிடல்சின் துல்லிய தாக்குதலில்...