×

ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்களுக்கு அபராதம்: அதிகாரிகள் நடவடிக்கை

திருத்தணி: திருத்தணி பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி, அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரனை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். தமிழக போக்குவரத்து ஆணையர் நடராஜன் உத்தரவின்படி, திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் மேற்பார்வையில், திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் லீலாவதி சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரக்கோணம் பைபாஸ் சாலை, திருத்தணி சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது தனியார் தொழிற்சாலை வாகனங்கள், கனரக வாகனங்கள் உள்பட பல வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தார். இந்த சோதனையின்போது 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஏர் ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த வாகனங்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இந்த ஆய்வின்போது பர்மிட் இல்லாமல் இயங்கி வந்த தனியார் தொழிற்சாலை வேனையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Fines for Air Horn fitted vehicles: Officers action
× RELATED மருதமலை வனப்பகுதியில் தாயுடன்...