×

ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் நவீன ரோபோட்டிக்ஸ் ஆய்வகம்

சென்னை: தண்டலத்தில் உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் `ஐசக் அசிமோவ்’ என்ற அதிநவீன ரோபோட்டிக்ஸ் ஆய்வகம் திறப்பு விழா, ராஜலட்சுமி நிறுவனங்களின் துணை தலைவர் எம்.அபய் சங்கர் தலைமையில் நடந்தது. இதில், சென்னை ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவன துணை தலைவர் ஆர்.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஆய்வகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: மாணவர்களுக்கு இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு கருத்துகளை பயன்படுத்தி ரோபோக்களை வடிவமைத்தல், கட்டமைத்தல் மற்றும் தொழில்துறை சார்ந்த 4.0 பயிற்சியை இந்த ஆய்வகத்தின் மூலம் வழங்குவதால் அதிக வேலை வாய்ப்புகளை எளிதில் பெற இயலும், என்றார்.

தொடர்ந்து, எம்.அபய் சங்கர் பேசுகையில்: இந்த ஆய்வகம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எங்கள் மாணவர்கள் பட்டப்படிப்புக்கு பிறகு நிகழ்நேர சவால்களை எதிர்கொள்ள தயாராகும்போது, அவர்கள் தொழில்துறையின் தற்போதைய முன்னேற்றங்களுடன் தங்களை புதுப்பித்துக் கொண்ட நிலையில் இருப்பார்கள், என்றார். இந்நிகழ்ச்சியில், ராஜலட்சுமி நிறுவனங்களின் ஆலோசகர்  டாக்டர் சி.ஆர்.முத்துகிருஷ்ணன், டாக்டர் எஸ்.என்.முருகேசன், கல்லூரி முதல்வர், துறை தலைவர்கள்,  பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Rajalakshmi College of Engineering , Modern Robotics Laboratory at Rajalakshmi College of Engineering
× RELATED ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் நவீன ரோபோட்டிக்ஸ் ஆய்வகம்