சூப்பர் ஜயன்ட்சை வீழ்த்தி குஜராத் அசத்தல் வெற்றி

புனே: எம்சிஏ ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக கில், சாஹா களமிறங்கினர். சாஹா 5 ரன் எடுத்து மோஷின் பந்துவீச்சில் வெளியேற, அடுத்து வந்த வேட் 10 ரன், ஹர்திக் 11 ரன் எடுத்து ஆவேஷ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். குஜராத் 9.1 ஓவரில் 51 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறிய நிலையில், கில் - மில்லர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தது. மில்லர் 26 ரன் (24 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஹோல்டர் பந்துவீச்சில் பதோனி வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் கில் - திவாதியா இணைந்து ஸ்கோரை உயர்த்தினர்.

குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது. கில் 63 ரன் (49 பந்து, 7 பவுண்டரி), திவாதியா 22 ரன்னுடன் (16 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 13.5 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 82 ரன் எடுத்து, 62 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக ஹூடா 27 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, ) விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். லக்னோ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 13.5 ஓவரில் 82 ரன் மட்டுமே எடுத்து படுதோல்வியை தழுவியது.  குஜராத் பந்துவீச்சில் ரஷித்கான் 24 ரன் கொடுத்து 4 விக்கெட் விழுத்தினார்.

Related Stories: