×

அமலைச்செடிகளால் மாசடைந்த சண்முகாநதி பழநியில் களமிறங்கிய தன்னார்வலர்கள்

பழநி: பழநி சண்முகாநதி அமலைச்செடிகளால் மாசடைந்ததால் தன்னார்வலர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.கோயில் நகரான பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பழநி-உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சண்முகாநதியில் குளித்து விட்டு செல்வது வழக்கம். இதனால் கோயில் நிர்வாகம் சார்பில் சண்முகாநதி கரையோரம் முடிக்காணிக்கை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தவிர குளிக்குமிடம், கழிவறை, உடை மாற்றும் அறை போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சண்முகாநதி ஆற்றில் தற்போது அமலைச்செடிகள்ஆக்கிரமித்துள்ளன. இதனால்பக்தர்கள் குளிக்க முடியாமல்அவதியடைந்து வந்தனர். பழநி சிவநெறி திருக்கூட்டம் அமைப் பினை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர் கதிர் உள்ளிட்டோர் அமலைச்செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக பக்தர்கள் குளிக்கும் கரையோரமுள்ள அமலைச்செடிகள் அகற்றப்பட்டன. வாரந்தோறும் தூய்மைப்பணி நடைபெறுமென்றும், விருப்பமுள்ள தன்னார்வலர்கள் இணைந்து கொள்ளலாமெனவும் தெரிவித்துள்ளனர்.  தூய்மைப்பணியில் ஈடுபட்டுவரும் தன்னார்வலர்களுக்கு பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.


Tags : Sanamukanathi Padani , Amalaichedi, polluted, Shanmuganathi Palani, volunteers
× RELATED சென்னையில் கலைஞர் புகைப்பட கண்காட்சி 7ம் தேதி வரை நீட்டிப்பு..!!