×

பராமரிப்பின்றி உள்ள வரதமாநதி அணையை சீரமைக்க கோரிக்கை

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி  மலையின் அடிவாரத்தில் கொடைக்கானல் சாலையில் வரதமாநதி அணை உள்ளது. 67  அடி உயரமுள்ள வரதமாநதி அணையில் 51.97 அடிக்கு நீர் உள்ளது. கொடைக்கானல்  செல்லும் சுற்றுலா பயணிகளும், பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களும் அதிகளவு  இந்த அணைக்கு சென்று நேரத்தை செலவிடுவது வழக்கம். ஆனால், இந்த அணை கடந்த  சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது.

நீரூற்று  மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து கிடைக்கின்றன. அணையின் பூங்கா  குப்பைகள் குவிந்த நிலையில், புதர் மண்டிக் கிடக்கிறது. தவிர,  குடிமகன்களின் சேட்டை காரணமாக அணையின் பல பகுதிகளில் மதுபாட்டில்கள்  சிதறிக் கிடக்கின்றன. இதனால் வரதமாநதி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள்  முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள்  அணையில் உள்ள பூங்காவை ஒழுங்குபடுத்தி, சேதமடைந்துள்ள விளையாட்டு  உபகரணங்களை சீரமைத்து, கண்ணைக் கவரும் வகையில் புனரமைக்க வேண்டுமென  சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Varathamanadhi Dam , Rehabilitation of Varatmanadi Dam, without maintenance
× RELATED உயிரைப் பறித்தது செல்பி மோகம் சென்னை...