×

சேத்தியாத்தோப்பு பழைய பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் உள்ள அணைக்கட்டு பாலம் பழமையான பாலமாகும். ஆங்கிலேயர்களால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். மழை. வெள்ளகாலங்களில் சேத்தியாத்தோப்பிற்கு மேற்கு பகுதியில் உள்ள மணிமுக்தாற்றில் இருந்து வடிகாலாக வரும் மழை வெள்ளநீர், கூடலையாத்தூர் வழியாக வெளியேறும் மழை வெள்ளநீரும் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் வரை அணை கட்டு பாலத்தை கடந்து பரங்கிபேட்டை கடலுக்கு சென்றடையும். இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இப்பாலத்தை கடந்துதான் அத்தியாவசிய தேவைகளுக்கு அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

 மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் சென்று வருகின்றனர். அணைக்கட்டு பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவரின் உயரம் குறைவாக உள்ளதால் தொடர் விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. தடுப்பு சுவரின் உயரம் குறைவாக உள்ளதால் நடந்து செல்லும் பொதுமக்கள் நிலைதடுமாறி 60 அடி ஆழமுள்ள வெள்ளாற்றின் சிமென்ட் தளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழக்க நேரிடும் அவலம் நீடித்து வருகிறது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து பக்கவாட்டு தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Sethiyathoppu , Sethiyatthoppu, side of the old bridge, to increase the height
× RELATED சேத்தியாத்தோப்பு பகுதியில் புதிய மின்மாற்றி அமைப்பு