×

காவலர் போக்குவரத்து பிரிவுக்கு 6 இழுவை வாகனங்கள்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை பெருநகர காவல் போக்குவரத்து பிரிவுக்கு 6 நன்கு சக்கர, 6 இரண்டு சக்கர இழுவை வாகனங்கள் ரூ 2 கோடியில் வழங்கப்படும். 11 காவல்துறை சரகங்களிலும் துணை காவல் கண்காணிப்பாளர் பதவி ஏற்படுத்தப்படும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு, மாநில கணினிசார் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு தலைமையகம் கட்டப்படும், காவலர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் கணினிசார் குற்றப்பிரிவு தலைமையக கட்டடம் கட்டப்படும், முத்துப்பேட்டையில் பாதுகாப்பு பணிக்கு வரும் காவலர்கள் தங்க ரூ.12 கோடியில் பாலையம் கட்டப்படும்.4361 காவலர் குடியிருப்புகளில் பழுதுபார்ப்பு பணிக்காக ரூ.28 கோடி சிறப்பு நிதி இந்த ஆண்டு வழங்கப்படும் கடலூர் தஞ்சை மாவட்டங்களில் 203 புதிய காவலர் குடியிருப்புகள் கட்டப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப நுண்ணறிவு பிரிவில் தரவுகளை சேமித்து வைக்கவும் விரிவாக்கம் செய்யவும் பயன்படும் வன்பொருள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். சென்னை துறைமுக ஆய்வகத்தில் ஆய்வு திறனை வலுப்படுத்த எல்சிஎம்எஸ் எனபப்டும் ஆய்வுக்கருவி வாங்கவும், காவல்துறை பணியாளர்களை போல் தீயணைப்பு பணியாளர்களுக்கும் இடர்படி உயர்த்தி வழங்கப்படும் எனவும் தீயணைப்பு பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மிகைப்பணி ஊதியம் ஊயர்த்தி வழங்கப்படும் என்றும் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

அன்னியூர் (விழுப்புரம்), திருப்பரங்குன்றம், ஏழாயிரம் பண்ணையில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் , திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் உள்ளிட்ட இடங்களில் ரூ.11 கோடியில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் ரூ 37.5 கோடி செலவில் புதிதாக 50 நீர்தாங்கி வண்டிகள் வாங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தீ மற்றும் உயிர் மீட்பு பணிகளில் புதிய தொழிநுட்பத்தை செயல்படுத்த தீ ஆணையம் உருவாக்கப்படும் என்றும், இரவுப்பணிக்கு செல்லும் காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு படியாக மாதம் ரூ 300 வழங்கப்படும், ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலையை தடுக்க எஸ்.பி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  பேரவையில் அறிவித்துள்ளார்.  


Tags : Guard Transport Division ,BST ,K. Stalin , 6 tow vehicles for Police Traffic Division, Stalin's announcement
× RELATED மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே...