×

பூம்புகார் தொகுதி சந்திரபாடி கிராமத்தில் ரூ.10 கோடியில் மீன் இறங்கு தளம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் பேசுகையில், \”பூம்புகார் தொகுதி, சந்திரபாடி ஊராட்சியின் அருகில் நண்டலாற்றின் கடல் கழிமுகப் பகுதியை ஆழப்படுத்தி சிறு படகுகள் நிறுத்தும் வசதி செய்து தர அரசு முன் வருமா” என்றார். இதற்கு பதிலளித்து மீன்வளம் - மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் “சந்திரபாடி கிராமத்தில் 26 விசைப்படகுகள், 274 நாட்டுப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

மீனவர்களின் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த போதுமான வசதி இல்லாத காரணத்தினால், சந்திர பாடி கிராமத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் அமைக்கப்படும். இதன் மூலம் 550 மீனவ குடும்பங்கள் பயன் பெறுவதோடு, மீன்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய இயலும். மேலும், நண்டலாற்றின் இருபுறமும் கருங்கல் கொட்டி, கழிமுகப்பகுதியை ஆழப்படுத்த தேவையான வசதிகள் இருப்பின் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Tags : Chandrapadi ,Poompuhar ,Minister ,Anita Radhakrishnan , Poompuhar block, Rs 10 crore, fish landing, site
× RELATED தரங்கம்பாடி பகுதியில் குடிநீர்...