மதுரை: மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அரசு சித்திரை பொருட்காட்சி நடக்கும் என தகவல் பரவியது. மாட்டுத்தாவணி மாநகராட்சி இடத்தில் தனியார் நிறுவனம் ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேற்கொண்டு வந்தது. பணி முடிந்த நிலையில் அந்த இடத்தை சுத்தம் செய்கின்றனர் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமுக்கத்தில் வர்த்தக மைய கட்டுமான இடம் தவிர மீதமுள்ள இடத்தில் அரசு பொருட்காட்சி நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இந்நிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் மே14-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு அரசு சித்திரை பொருட்காட்சி நடைபெறுகிறது. அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், பி.மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். பொருட்காட்சியில் அரசின் துறை சார்ந்த சாதனை அரங்குகள் பொழுதுபோக்கு ஆகியவை இடம்பெற உள்ளது என்று தெரிவித்தனர்
