ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை: சட்டசபையில் அமைச்சர் காந்தி தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சோளிங்கர் முனிரத்தினம்(காங்கிரஸ்) பேசுகையில் “சோளிங்கர் மற்றும் பணப்பாக்கத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க அரசு ஆவன செய்யுமா” என்றார். இதற்கு பதிலளித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பேசுகையில் “சோளிங்கர் மற்றும் பனப்பாக்கத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான நிலம் அளிக்கும் பட்சத்தில் ‘‘ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா’’ திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் முன்வந்தால் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்தபோது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜவுளி பூங்கா அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. பணப்பாக்கத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

Related Stories: