×

மீண்டும் விவசாயிகள் போராட்டம்!: மேகாலயா ஆளுநர் எச்சரிக்கை

மீரட்: குறைந்தபட்ச ஆதரவு விலை மீதான சட்டத்தை விரைந்து செயல்படுத்தவில்லை என்றால், ஆபத்தான நிலையை எதிர்கொள்ள வேண்டியவரும் என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பேசுகையில், ‘விவசாயிகளின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) மீதான சட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகள் மத்தியில் அதிகரித்து வரும் அதிருப்தியால், மீண்டும் விவசாயிகள் போராட்டம் நடக்கலாம். விவசாயிகளின் பல பிரச்னைகளை தீர்க்க பிரதமர் மோடி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை  பிரச்னையை இன்னும் தீர்க்கவில்லை.

Tags : Meghalaya Governor , Again, farmer, struggle, governor, warning
× RELATED ஒன்றிய அரசுக்கு எதிராக பேசாமல்...