×

இந்தியா வருகிறாரா எலான் மஸ்க்?.. இணையதளத்தில் காரசார விவாதம்

வாஷிங்டன்: உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப் பெரிய பணக்காரரான டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், புகழ்பெற்ற சமூக வலைத்தளமான டிவிட்டர் நிறுவனத்தை கடந்த சில நாட்களுக்கு முன் 3.30 லட்சம் கோடிக்கு வாங்கினார். இதற்காக தனது டெஸ்லா நிறுவனத்தின் 44 லட்சம் பங்குகளை மஸ்க் விற்றதாக கூறப்படுகிறது. இதனிடையே ஆக்ரா கோட்டையின் முகப்பு பகுதி எத்தனை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது என டிவிட்டரில் ஒருவர் பதிவிட்டாயிருந்தார்.

இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க் ஆக்ரா கோட்டை மிக பிரமாதமாக இருப்பதாகவும், 2007ம் ஆண்டு தாஸ்மாஹாலை நேரில் பார்த்ததாகவும், அது உண்மையிலேயே உலக அதிசயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் மீண்டும் இந்தியாவுக்கு வர திட்டம் உள்ளதா என ஏராளமான டிவிட்டர் பயனாளிகள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனை தொடர்ந்து எலான் மஸ்க்கை குறிப்பிட்டு Paytm நிறுவனர் விஜய் சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில்,இந்தியாவிற்கான FSD -ஐ (Full Self-Driving) உருவாக்குவது டெஸ்லாவுக்கு நம்பமுடியாத சவாலாக இருக்கும்.

நாங்கள் மிகவும் கட்டுக்கடங்காத சாலையைப் பயன்படுத்துபவர்களாக அறியப்படுகிறோம். தாஜ்மஹாலில் டெஸ்லாவை முதலில் டெலிவரி செய்ய நீங்கள் எப்போது இங்கு வருகிறீர்கள்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

Tags : Elon Musk ,India , Is Elon Musk coming to India?
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...