‘ரூ.18 லட்சம் வரை கொடுத்திருக்கிறேன்’ ரகசிய திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ மறுக்கிறார்: 3வது கணவர் மீது சென்னை கர்ப்பிணி புகார்

திருவண்ணாமலை: சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் வித்யாராணி(32). இவர் தனது 12 வயது மகனுடன் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் ‘பெண்கள் ஜாக்கிரதை’ எனும் பேனரை கையில் ஏந்தியபடி கலெக்டர் முருகேஷிடம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எனக்கும் சுந்தர் என்பவருக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணமானது. ஒரு மகன் பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம். பின்னர் மதுரையை சேர்ந்த சரவணன் என்பவருடன் கடந்த 2011ம் ஆண்டு 2வது திருமணமானது. அப்போது 2 மகள்கள் பிறந்தனர். பிறகு என்மீது சந்தேகம் கொண்டு பிரச்னை செய்த சரவணன் என்னை பிரிந்து சென்று விட்டார். மேலும், 2 மகள்களையும் தன்னுடன் அழைத்து சென்று விட்டார். எனவே என் மூத்த மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தேன்.

இந்நிலையில் கடந்தாண்டு பேஸ்புக் மூலம் திருவண்ணாமலை பேகோபுரம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் அறிமுகமானார். ஆன்லைனில் வியாபாரம் செய்து வருவதாக தெரிவித்தார். ₹10 ஆயிரம் கொடுத்தால் தினமும் ₹200 கிடைக்கும் என்றார். அதை நம்பி பல்வேறு தவணைகளில் என்னுடைய சேமிப்பு பணம், சீட்டு பணம் என ₹18 லட்சம் வரை கொடுத்திருக்கிறேன். மேலும், அவருக்கு திருமணமாகிவிட்டது எனவும், அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதால், இருவரும் சேர்ந்து வாழலாம் என ஆசை வார்த்தை கூறி திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தார். ரகசியமாக திருமணமும் செய்து கொண்டார். தற்போது நான் 5 மாத கர்ப்பமாக உள்ளேன். ஆனால் தற்போது என்னுடன் சேர்ந்து வாழ மறுத்து மிரட்டுகிறார்.

இதுதொடர்பாக, ஏற்கனவே சென்னை அம்பத்தூர் மகளிர் போலீசில் புகார் அளித்தேன். திருவண்ணாமலை மகளிர் போலீசிலும் புகார் அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்ைகயும் எடுக்கவில்லை. எனவே, சிலம்பரசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது. பேஸ்புக் மூலம் அறிமுகமாகி 3வது திருமணம் செய்து கொண்ட கர்ப்பிணி கொடுத்த புகாரை, போலீசார் முறையாக விசாரணை நடத்திய பிறகே அவரது புகாரின் உண்மைத்தன்மை குறித்து முழுமையாக தெரியவரும்.

Related Stories: