புதுச்சேரியில் மீண்டும் பயங்கரம் மது பாரில் நாட்டு வெடிகுண்டு வீச்சு-ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள திருவள்ளுவர் சாலையில் பாருடன் கூடிய தனியார் மதுக்கடை இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் கோவிந்த சாலை பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் மது அருந்தினர். பின்னர் அவர்களிடம் மது மற்றும் உணவுகளுக்கான பணத்தை கடையில் வேலை செய்யும் சப்ளையர் கேட்டுள்ளார். அப்போது அவர்கள், நாங்கள் யார் தெரியுமா? எங்களிடமே பணம் கேட்கிறீர்களா? என கேட்டுள்ளனர். இதனால் கடை ஊழியர்களுக்கும், அந்த போதை வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு அந்த கும்பல் மீண்டும் திருவள்ளுவர் சாலையில் உள்ள மதுக்கடைக்கு வந்தது. அப்போது வழக்கம்போல் மதுக்கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென அந்த கும்பல் தாங்கள் எடுத்து வந்த நாட்டு வெடிகுண்டை பார் முன்பு வீசியது. பயங்கர சத்தத்துடன் வெடித்ததால், மது அருந்த வந்தவர்கள், பார் ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது அந்த சாலை வழியாக வந்தவர்களும் பயந்து ஓடினர். வெடிகுண்டை வீசிய நபர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் கோவிந்த சாலை வாலிபர்கள், கடை ஊழியர்களை மிரட்டுவதற்காக இந்த செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இதில் சில சிறுவர்களும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்து, வெடிகுண்டு

உருளையன்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முதலியார்பேட்ைட சிமெண்ட் ரோடு ரயில்வே தண்டவாளம் பகுதியில் கடந்த வாரம் 5ம் தேதி நாட்டு வெடிகுண்டு வெடித்தது.

தற்போதும் உருளையன்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மது குடித்த தகராறில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. எனவே இதற்கு காவல் துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: