அரூர் பஸ் ஸ்டாண்டில் தனியார் பஸ்களில் பொருத்திய 20 ஏர்ஹாரன்கள் பறிமுதல்

அரூர் : தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மேற்பார்வையில், அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன், அரூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று திடீர் வாகன ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனியார் பஸ்களில் அளவிற்கு அதிகமாக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பஸ்களில் இருந்த, 20 ஏர் ஹாரன்களை அகற்றி பறிமுதல் செய்தனர். இது போன்று அளவிற்கு அதிகமாக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பஸ் டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

Related Stories: