போதைப்பொருள் தடுப்பில் ஈடுபடும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: போதைப்பொருள் தடுப்பில் ஈடுபடும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆளில்லா விமான அலகு காவல்படை பிரிவு ரூ.1.20 கோடி மதிப்பில் விரிவு செய்யப்படும். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவுடன் இணைத்து போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவாக சீரமைக்கப்படும். சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சிக் கல்லூரி, வண்டலூர் அருகே உள்ள உயர் காவல் பயிற்சியக  வளாகத்திற்கு மாற்றப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

Related Stories: