ஆசிய கோப்பை ஹாக்கி இந்திய அணிக்கு ரூபிந்தர் கேப்டன்

புதுடெல்லி: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டித் தொடருக்கான இந்திய அணி கேப்டனாக ரூபிந்தர் பால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஹாக்கி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆசிய கோப்பை தொடர் இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் மே 23ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஓய்வு அறிவிப்புக்கு பின்னர் மீண்டும் களத்துக்கு திரும்பி உள்ள ரூபிந்தர் கேப்டனாகவும், பிரேந்தர் லாக்ரா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரூபிந்தர் தலைமையிலான அணியில் மொத்தம் 20 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கோல்கீப்பர்கள்: பங்கஜ் குமார், சுராஜ் கார்கெரா.

தற்காப்பு: ரூபிந்தர் பால் சிங் (கேப்டன்), யாஷ்தீப் சிவாச், அபிஷேக் லாக்ரா, பிரேந்தர் லாக்ரா (துணை கேப்டன்), மன்ஜீத், திப்சன் திர்கி.

நடுகளம்: விஷ்ணுகாந்த், ராஜ் குமார், மாரீஸ்வரன் சக்திவேல், ஷெஷே கவுடா, சிம்ரன்ஜீத் சிங்.

முன்களம்: பவன் ராஜ்பார், அபாரன் சுதேவ், எஸ்வி சுனில், உத்தம் சிங், எஸ்.கார்த்தி.

மாற்று வீரர்கள்: மனிந்தர் சிங், நிலாம் சஞ்சீவ் எக்சஸ்.

Related Stories: