×

தாமஸ் கோப்பை பேட்மின்டன் நாக்-அவுட் சுற்றில் இந்தியா

பாங்காக்: தாமஸ் கோப்பை பேட்மின்டன் தொடரின் நாக்-அவுட் சுற்றில் விளையாட இந்திய ஆண்கள் அணி தகுதி பெற்றுள்ளது. சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா முதல் லீக் ஆட்டத்தில் ஜெர்மனியை 5-0 என்ற கணக்கில் அபாரமாக வென்றது. அடுத்து கனடா அணியுடன் நேற்று மோதிய இந்தியா, இப்போட்டியிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 5-0 என வெற்றியை வசப்படுத்தியது.

ஒற்றையர் ஆட்டத்தில் கனடாவின் பிரையன் யாங்கை எதிர்கொண்ட கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் செட்டை 20-22 என்ற கணக்கில் இழந்தாலும், அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடி 21-11, 21-15 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி மற்றும் கிரிஷ்ண பிரசாத் - விஷ்ணுவர்தன் ஜோடிகளும், ஒற்றையர் ஆட்டங்களில் எச்.எஸ்.பிரணாய், பிரியன்ஷு ரஜாவத் ஆகியோரும் வெற்றியைப் பதிவு செய்தனர்.

தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்திய இந்தியா சி பிரிவில் முதல் 2 இடங்களுக்குள் வருவதை உறுதி செய்ததால், நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. கடைசி லீக் ஆட்டத்தில் நாளை சீன தைபே அணியின் சவாலை இந்தியா எதிர்கொள்கிறது.


Tags : India ,Thomas Cup , India in the Thomas Cup Badminton Knock-Out Round
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...