புதுச்சேரி ஜிப்மரில் இந்தியை திணிப்பதா? வேல்முருகன் கண்டனம்

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் உள்ள ஒன்றிய அரசு பணிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியை பயன்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து பதிவேடுகளும் இனி இந்தியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம். எனவே, ஜிப்மர் உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களில் இனிவரும் காலங்களில் அனைத்து பதிவேடுகளும் இந்தி மொழியில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்பப்பெற வேண்டும். இந்தி திணிப்பின் வாயிலாக தமிழர்களை சீண்டாதீர்.

Related Stories: