இலங்கையில் நெருக்கடி நிலையை திரும்ப பெறவேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: இலங்கை ஆட்சிப் பொறுப்பில் ராஜபக்சே சகோதரர்கள் விலக இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  உணவு சமைக்க எரிப்பதற்கு விறகு கிடைக்காமல், தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை உடைத்து எரிப்பதாக, நேற்று முன்தினம் என்னிடம் கூறினர். கேட்க வேதனையாக இருந்தது. போராட்டங்களை ஒடுக்குவதற்கு, நெருக்கடி நிலையை அறிவித்த கோத்தபய அதைத் திரும்பப் பெற்றார். ஆனால், மீண்டும் நேற்று (9ம்தேதி)நெருக்கடி நிலையை அறிவித்து இருக்கின்றார். அதற்கு, ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்து இருக்கின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: