எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசு நியமனம் செய்ய அதிகாரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் மசோதா தாக்கல்

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறியிருப்பதாவது: குஜராத், தெலங்கானா, கர்நாடகா பல்கலைக்கழகங்களில் மாநில அரசின் இசைவுடன் வேந்தரால் துணை வேந்தரை நியமனம் செய்வதற்கு அம்மாநிலத்தில் உள்ள சட்டங்கள் வழிவகை செய்துள்ளது. இதேபோல, தமிழ்நாட்டிலும், 1987ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் சட்டத்தினை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்வதாக சட்டமுன்வடிவில் தெரிவித்துள்ளது.

இச்சட்ட திருத்ததின்படி வேந்தர் என்பதற்கு பதிலாக அரசு என்ற சொற்றொடர் மாற்றம் செய்யப்படுவதாகவும், துணை வேந்தர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினாலோ துணை வேந்தரை பதவியில் இருந்து நீக்ககூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தரின் விளக்கத்தை கேட்கும் விதமாக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் அல்லது, அரசு தலைமைச்செயலாளருக்கு குறையாத ஒரு அலுவலரை கொண்ட ஒருநபர் விசாரணை மேற்கொள்ள ஆணை பிறப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* பேரவையில் இன்று...

சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீது நேற்று நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். மேலும், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சம்பந்தமான புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுகிறார். அதை தொடர்ந்து, கடந்த மாதம் 6ம் தேதி முதல் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படுகிறது. ஏனைய அரசினர் அலுவல்களும் எடுத்துக்கொள்ளப்படும். இதையடுத்து, கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் இன்று (10ம் தேதி) வரை 22 நாள் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் முடிவடைந்து இன்று பிற்பகலுடன் கூட்டத்தொடர் நிறைவடைகிறது.

Related Stories: