×

ஒடுப்பறை நாகரம்மன் கோயிலில் கொழுக்கட்டை படையல் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் இரணியல் அருகே ஒடுப்பறை நாகரம்மன்கோயில் உள்ளது. இந்த கோயிலில் சித்திரை மாதம் கடைசி ஞாயிறு அன்று ஆயில்ய நட்சத்திரம் வரும்நாள் கொழுக்கட்டை சுட்டு படையல் திருவிழா நடத்துவது வழக்கம். இந்த கோயிலில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். கொழுக்கட்டை படையல் திருவிழா கடந்த 2008ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன்பிறகு 14 ஆண்டுகள் கடந்து நேற்று சித்திரை கடைசி ஞாயிற்றுகிழமையுடன் ஆயில்ய நட்சத்திரம் வந்தது. இதனை தொடர்ந்து கொழுக்கடை படையல் திருவிழா நாகரம்மன்கோயிலில் சிறப்பாக நடந்தது.

 இதற்கான கோயிலில் வழிபாடு நடத்தும் சமுகத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு ஒருவருக்கு ஒரு கொழுக்கட்டை வீதம் வீட்டில் இருந்த தயாரித்தனர். ஒரு கொழுக்கட்டை தயார் செய்ய 750 கிராம் பச்சரிசி மாவு, 450 கிராம்  சர்க்கரை, ஒரு தேங்காய், ஒரு மட்டிபழம், 10 கிராம் ஏலம், 10 கிராம் சுக்கு  ஆகியவற்றை கொண்டு தயார் செய்தனர். தயார் செய்த கொழுக்கட்டையை நேற்று இரவு கோயிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் கோயிலை சுற்றி உள்ள தென்னந்தோப்புகளில் கொழுக்கட்டை சுடுவதற்கு என்று குழிகள் தோண்டப்பட்டு குழிகளில் தென்னை கதம்பை கொண்டு நிரப்பி, அதில் தீயிட்டு, கொழுக்கட்டையை சுடும் நிகழ்ச்சி நேற்று இரவு 10 மணி அளவில் தொடங்கியது.

 கொழுக்கட்டை சுடும் நிகழ்ச்சி இன்று காலை வரை நடந்தது. குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்தும், தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும், கேரள, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து கொழுக்கட்டை படையல் செய்தனர். நேற்று இரவு குருந்தன்கோடு பகுதியில் இருந்து இரணியல் வரை உள்ள தென்னந்தோப்புகளில் கொழுக்கடை படையல் நேர்த்திக்கடனை மக்கள் செய்தனர்.

Tags : Nakaramman Temple , kolakttai, temple
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...