வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தையை 100 நாட்களுக்கு பின் காட்டிய பிரியங்கா சோப்ரா: ரசிகர்கள் வாழ்த்து மழை

கலிபோர்னியா: வாடகைத் தாய் மூலம் பெற்ற தனது பெண் குழந்தையை 100 நாட்களுக்கு பின் நடிகை பிரியங்கா சோப்ரா தம்பதியினர் வெளியுலகுக்கு காட்டினர். பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டில் தடம் பதித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் பாடகர் நிக் ஜோனாஸ் இருவரும் இந்தாண்டு ஜனவரி மாதம், ஒரு அழகான குழந்தைக்கு பெற்றோர் ஆயினர். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாக அறிவித்தனர். அதன்பிறகு, அந்த குழந்தையை பற்றி எந்த தகவலையும் இருவரும் பகிர்ந்து கொள்ளவில்லை; அந்த குழந்தை ஆணா பெண்ணா என்றுகூட தெரியாமல் இருந்தது. சில மாதங்கள் கழித்து, பிரியங்கா ஜோனஸின் குழந்தை, பெண் குழந்தை என்று தெரியவந்தது. சமீபத்தில் அந்த குழந்தைக்கு ‘மால்தி மேரி சோப்ரா ஜோனஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கலிபோர்னியாவில் ஜனவரி 15ம் தேதி பிறந்த இந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மூலம் இந்த தகவலகள் தெரிய வந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. இந்நிலையில், அன்னையர் தினமான நேற்று, பிரியங்கா சோப்ரா - ஜோனாஸ் தம்பதியினர், தங்களது மகளின் முதல் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அந்தப் புகைப்படத்தில், பிரியங்கா சோப்ரா தனது மகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். ஜோனாஸ் அருகில் இருப்பது போன்று உள்ளது. ஆனால், இந்த பதிவில் குழந்தையின் முகத்தை ‘ஹார்ட் இமேஜ்’ மூலம் மறைத்துள்ளனர். கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு பிறகு, மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தங்களது வீட்டிற்கு குழந்தையை அழைத்து வந்ததாக ெதரிவித்துள்ளனர். எங்களின் அடுத்த அத்தியாயம் இனிமேல் தொடங்குகிறது. அன்னையர் தின வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இதற்கு அவர்களது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: