×

இலங்கையில் உச்சகட்ட பதற்றம்..! கொழும்பில் ராணுவம் குவிப்பு: கலவரத்தில் ஆளுங்கட்சி எம்.பி. உயிரிழப்பு, மேயர் வீட்டிற்கு தீ வைப்பு

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது. இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இலங்கை அரசுக்கு எதிராக ஒரு மாதத்துக்கு மேல் நடந்து வரும் போராட்டத்துக்கு பணிந்து பதவி விலகினார். பதவி விலகல் கடிதத்தை இலங்கை அதிபரும் தனது இளைய சகோதரருமான கோத்தபயவிடம் மகிந்த ராஜபக்சே வழங்கியுள்ளார்.கலவரம் பரவி வரும் அதே வேலையில் காலேமுகத்திடலில் ராஜபக்சே பதவி விலகலை வரவேற்று கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. கொழும்புவில் ராஜபக்சே ஆதரவாளர்களை ஏற்றிவந்த பேருந்து மீது ஜேசிபி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

ராஜபக்சே ஆதரவாளர்கள் பயணித்த கார், பேருந்தை போராட்டக்காரர்கள் ஏரியில் தூக்கி வீசினர். இலங்கை தலைநகர் கொழும்புவை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது. இலங்கை முழுவதும் பதற்றம் அதிகரிப்பதை அடுத்து விடுமுறையில் உள்ள அனைத்து காவலர்களும் பணிக்கு திரும்ப இலங்கை அரசு உத்தரவிட்டது. நிட்டாம்புவா என்ற இடத்தில் ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதை அடுத்து கூட்டத்தை கலைக்க போலீஸ் கண்ணீர் புகை குண்டு வீசினர். தொடர்ந்து நிட்டாம்புவாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்தனர். அதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். இதனிடையே போராட்டக்காரர்கள், ராஜபக்சே ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் ஆளுங்கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகொரலா உயிரிழந்தார்.

கொழும்பில் ராஜபக்சே ஆதரவாளர்கள் ஏற்றிவந்த வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் எம்.பி. உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கொழும்பில் கலவரத்தை கட்டுப்படுத்த முப்படை வீரர்களும் ஈடுபடுத்தப்படுவதாக பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. முப்படை வீரர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கும் படி இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : Sri Lanka ,Colombo ,Governor , Extrema tensión en Sri Lanka..! Ejército concentrado en Colombo: diputado oficialista en disturbios Muertos, prenden fuego a la casa del alcalde
× RELATED இலங்கை கார் பந்தய விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாப பலி, 23 பேர் படுகாயம்