×

விசாரணை கைதிகள் விக்னேஷ், தங்கமணி மரண வழக்குகளில் அரசு எதையும் மறைக்கவில்லை!: பேரவையில் ஈ.பி.எஸ்.க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்..!!

சென்னை: விசாரணை கைதிகள் விக்னேஷ், தங்கமணி மரண வழக்குகளில் அரசு எதையும் மறைக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்றியது யார்? என கேள்வி எழுப்பிய முதல்வர், விசாரணை கைதிகள் விக்னேஷ், தங்கமணி மரணம் தொடர்பான வழக்கில் அரசு எதையும் மறைக்கவில்லை என்று கூறினார். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்குபோல் விக்னேஷ், தங்கமணி வழக்கு விசாரிக்கப்படாது. நிச்சயம் இந்த அரசு அப்படி இருக்காது, யார் தவறு செய்தாலும் கட்டாயம் தண்டனை பெற்று தரப்படும். மீண்டும் சொல்கிறேன், சாத்தான்குளம் சம்பவம் போல் இது விசாரிக்கப்படாது, முறையாக விசாரிக்கப்படும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே சாத்தான்குளம் சம்பவம் முறையாக விசாரிக்கப்பட்டது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். யார் முதல்வராக இருந்தாலும் காவல்துறை தரும் அறிக்கையையே படித்து வருகிறோம். விக்னேஷ், தங்கமணி மரண வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் நடந்த லாக் - அப் மரணங்களில் எந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.


Tags : Vignesh ,Thangamani ,Chief Minister ,MK Stalin ,EPS , Trial prisoners Vignesh, Thangamani, EPS, MK Stalin
× RELATED ஹாட் ஸ்பாட் 2வது பாகம் உருவாகும்: இயக்குனர் தகவல்