திருச்சி அருகே விபத்து 2 சென்னை வாலிபர்கள் பலி

திருச்சி: சென்னை  மதுரவாயலை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(34). இவரது நண்பர்கள் வானகரத்தை சேர்ந்த ஏழுமலை(29),  கொரட்டூரை சேர்ந்த கார்த்திக்(29), காமராஜ்(29),  சுரேஷ்(40), ஆவடியை சேர்ந்த செல்வகுமார்(32), கவியரசு(31). இவர்கள் 7 பேரும் எலக்ட்ரானிக் ஜஸ்ட் டயல் மூலம் நண்பர்களானவர்கள். இவர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்றிரவு சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர். காரை செல்வகுமார் ஓட்டினார்.

அதிகாலை 1.30 மணி அளவில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையம்பட்டி ஆசாத் ரோட்டில் வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதியது. இதில் கார் நொறுங்கியது. இதில் இடிபாட்டுக்குள் சிக்கி பாலகிருஷ்ணன் அந்த இடத்திலேயே இறந்தார்.  ஏழுமலை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்தில் காமராஜ் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: