டெல்லி ஷாகின் பாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர்கள் வந்தன: எதிர்ப்பை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தம்..!

டெல்லி: தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று நாடே திரும்பி பார்த்த ஷாகின் பாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் வடக்கு ஜஹாங்கீர் புரியில் இது போன்று ஆகிக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி புல்டோசர்கள் கொண்டு வரப்பட்ட போது மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று சம்பவ இடத்திற்கு பிருந்தா காரத் முறையிட்டார். அப்போது இஸ்லாமியர்களை குறிவைத்து பாஜக ஆளும் வடக்கு டெல்லியில் மாநகர நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதேபோன்று தற்போது தெற்கு டெல்லி ஷாகின் பாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்றார். பின்னர் பேசிய அவர்; ஒரு கடை முன்பு இருந்த இரும்பு கம்பங்களை தானே முன்னின்று அகற்றி விட்டதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தெற்கு டெல்லி நிர்வாகமும் பாஜகவும் சூழ்ச்சி செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். இதனிடையே ஜஹாங்கீர் புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஷாகின் பாக்கில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து விசாரிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு மறுத்துவிட்டது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே எதிர்ப்பு காரணமாக ஷாகின் பாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: