புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பு இல்லை: ஆளுநர் தமிழிசை விளக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பு இல்லை என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். புதுச்சேரி மாநிலம், கோரிமேட்டில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு புதுவை மட்டுமல்லாமல் தென் இந்தியாவில் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் ஜிப்மரில் அனைத்து கோப்புகள், பதிவேடுகள் மற்றும் தலைப்புகளில் இந்தி கட்டாயம் என்று ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் உத்தரவிட்டிருந்தார்.

இதனை கண்டித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள தீர்ப்பாக மையத்தில் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் அகர்வால் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பு இல்லை. ஜிப்மர் ஒன்றிய அரசின் நிறுவனம். இங்கு இந்தி மட்டுமே தெரிந்தவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்காக இந்தியைப் பயன்படுத்த கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி நிர்வாகம் சார்பில் 4 சுற்றிக்கை அனுப்பப்பட்டது.

பொதுமக்களுடன் தொடர்பு கொள்ள தமிழை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து மருத்துவ சேவைகளிலும் தமிழ் மொழியே முதன்மைப்படுத்தப்படும். தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்படும் என சுற்றறிக்கையில் உள்ளது இதை நான் உறுதி செய்துள்ளேன். ஆகவே இதை சர்ச்சையாக்க வேண்டாம். புதுச்சேரியில் முதல் மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்தாக உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: