ஈரோடு அருகே குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை துரத்திய புலி: கேமரா மூலம் நடமாட்டத்தை கண்காணிக்க திட்டம்

ஈரோடு: ஈரோடு அருகே 2 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை புலி துரத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்காளிக் காட்டுப்புதூரைச் சேர்ந்த அனிதா, தன் குழந்தைகள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஊஞ்சக்காட்டு வலசு அருகே புலி ஒன்று உறுமிக் கொண்டே அனிதாவின் வண்டியைத் துரத்தியுள்ளது. பதற்றத்தில் அனிதா வேகமாக வண்டி ஓட்டி தப்ப முயன்ற போது, எதிரே வந்த காரின் வெளிச்சத்தைக் கண்டு புலி காட்டிற்குள் ஓடி மறைந்தது. இது குறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.

இதே போல, கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோப்பு காட்டில் அம்மன் கோயில் திருவிழாவின் போது நடந்த கிடா வெட்டில், இரவு 8 மணி அளவில் புலி வந்து கிடாவின் ரத்தத்தை குடித்து விட்டு சென்றதாக கோயில் பூசாரி தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், தாண்டாம்பாளையம், செங்காட்டுபுதூர், ஊஞ்சக்காட்டு வலசு ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 கேமராக்கள் அமைத்து தொடர்ந்து 4 நாட்களுக்கு கண்காணிக்கப்படும் என்றும், விலங்குகள் கண்டறியப்பட்டால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

Related Stories: