6 ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் : உத்தரகாண்ட் போலீஸ் உஷார்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் முக்கிய நகரங்களான டேராடூன், ரூர்க்கி, ரிஷிகேஷ், ஹரித்வார், நஜிபாபாத், லக்சர் ஆகிய இடங்களில் உள்ள 6 ரயில் நிலையங்கள் தகர்க்கப்படும் என, அம்மாநில போலீசாருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதையடுத்து மேற்கண்ட ரயில் நிலையங்களில் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர். இதுகுறித்து உத்தரகாண்ட் டிஜிபி அசோக் குமார் கூறுகையில், ‘மே 7ம் தேதி ரூர்க்கி ரயில் நிலைய கண்காணிப்பாளருக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

இதுபோன்ற போலி மிரட்டல் கடிதங்கள் அவ்வப்போது வருகின்றன. உத்தரகாண்டின் 6 ரயில் நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: