×

கொல்கத்தாவுடன் இன்று மோதல் 3வது வெற்றி பெறுமா மும்பை?

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை 3வது வெற்றியை பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மும்பை டி.ஒய். பாட்டீல் அரங்கத்தில் இரவு 7.30 மணிக்கு துவங்கும் 56வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை இதுவரை ஆடிய 10 போட்டிகளில் 8 தோல்வி, 2 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்
தில் உள்ளது.

நடப்பு தொடரில் மும்பை கடந்த 2 போட்டிகளில் பலமிக்க ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளை வென்றுள்ளது. எனவே இன்றைய போட்டியிலும் வெற்றிபெற மும்பை முனைப்பு காட்டும். பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தாலும் எஞ்சியுள்ள போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் மும்பை அணி வீரர்கள் உள்ளனர்.

கொல்கத்தா அணியை பொறுத்தமட்டில் மும்பையை போன்றே நிலையான ஆட்டம் ஆடாததால் நடப்பு தொடரில் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அணியில் சிறப்பான வீரர்கள் இருந்தாலும் 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்விகளை பெற்றுள்ளது. ரன் ரேட்டிலும் பின்தங்கி உள்ளது. இன்றைய போட்டியில் மும்பையை வீழ்த்தி புள்ளி பட்டியலில் சற்று உயரலாம் என்ற எண்ணத்தில் கொல்கத்தா அணி வீரர்கள் போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : Mumbai ,Kolkata , Kolkata, Conflict, Victory, Mumbai
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...