மும்பையில் ஹவாலா பேர்வழிகள், கடத்தல்காரர்கள் வீடுகளில் அதிரடி சோதனை!: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளி கைது..!!

மும்பை: இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளியை மும்பையில் உள்ள அவரது வீட்டில் வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர் சலீம் என்பவர் ஆவார். மும்பையில் தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளிகள் மற்றும் சில ஹவாலா மோசடி நபர்களின் வீடுகளில் நேற்று நள்ளிரவு முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். உள்துறை அமைச்சகம் எடுத்த ஆணையை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் சலீம் கைது செய்யப்பட்டதோடு, அவரிடம் இருந்து சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

மேலும் ஹவாலா மோசடி செய்யும் நபர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என 10க்கும் மேற்பட்டோரின் வீடுகளிலும் தேசிய புலனாய்வுதுறை முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அண்மையில் தாவூத் இப்ராஹிம் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது அவரது கூட்டாளிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செய்யப்பட்ட தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: