எல்.ஐ.சி. நிறுவன பங்குகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்; கூடுதல் முதலீடு செய்ய கடைசி வாய்ப்பு..!!

சென்னை: எல்.ஐ.சி. நிறுவன பங்குகளை வாங்க விண்ணப்பம் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளில் 3.5 விழுக்காட்டை பொதுப்பங்கு வெளியீட்டின் மூலமாக விற்பனை செய்து 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டு பொது பங்கு விற்பனைக்கான விருப்ப விண்ணப்பம் மே 4ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பங்கு ஒன்றின் விலை 902 ரூபாய் முதல் 949 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுப்பங்கு வெளியீட்டு முறையில் எல்.ஐ.சி. பங்குகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாளாகும்.

இன்று வர்த்தக நேர முடிவுக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து வரும் 17ம் தேதி முதல்  எல்.ஐ.சி.-யின் பங்குகள் இந்திய பங்குசந்திகளில் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.  இப்பங்கு வெளியீட்டில் சில்லறை முதலீட்டாளா்களுக்கு ரூ.45, பாலிசிதாரா்களுக்கு ரூ.60 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எல்.ஐ.சி. பணியாளர்களுக்கு 1.58 கோடி பங்குகளும், பாலிசி தாரர்களுக்கு 2.21 கோடி பங்குகளும் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: