×

ஜம்மு- காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதி வெடிபொருள்களுடன் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சந்தேகத்திற்கிடமான நபரை கைது செய்து விசாரித்ததில், அவர் லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த தீவிரவாதி என தெரிய வந்தது. பாரமுல்லா பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்த சோதனையில் ஒருவரை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர் அசாஸ் அஹ்மத் மிர் என்பதும், லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த தீவிரவாதி என்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து வெடிப்பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர் விசாரணையில் பொது இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இதேபோல், காஷ்மீரின் குல்காம் பகுதியில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த இரு தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். குல்காம் மாவட்டத்தின் செயான் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். விசாரணையில் இறந்தவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த ஹைதர் என்பதும், மற்றொருவர் குல்காமை சேர்ந்த ஷபாஸ் ஷா என்றும் தெரிய வந்தது. கொல்லப்பட்ட இருவருக்கும் அண்மையில் நடைபெற்ற இரு தீவிரவாத தாக்குதலுக்கு தொடர்பு இருப்பதாக காஷ்மீர் ஐஜிபி குமார் தெரிவித் தார். 


Tags : Lashkar-e-Taiba ,Jammu and Kashmir , Jammu and Kashmir, Lashkar-e-Taiba, militant, explosives, arrested
× RELATED லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த முகமது காசிம் குஜ்ஜார் தீவிரவாதியாக அறிவிப்பு