×

விராலிமலையில் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடு விற்பனை அமோகம்: வியாபாரிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை: விராலிமலை ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடியை தாண்டி ஆடுகள் விற்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டுச்சந்தை வழக்கம்போல இன்று அதிகாலை 4 மணிக்கு கூடியது. நாளை மறுநாள் விராலிமலை அம்மன் கோயில் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில், ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக ஆடுகளை வாங்க குவிந்தனர். 7 கிலோ எடை கொண்ட ஆட்டின் விலை ரூ.9 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.

ஆடுகள் விலை கிடுகிடுவென உயர்ந்ததால் இறைச்சிக்காக வாங்க வந்தவர்கள், ஆடுகளை வாங்க முடியாமல் திணறினர். பலர் வெளியூர்களில் இருந்து விராலிமலையில் தங்கி ஆடுகளை வாங்க வந்தனர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய வாரச்சந்தை, காலை 10 மணிவரை களைகட்டியது. நேர்த்திக்கடனை நிறைவேற்றும் கட்டாயத்தில் அதிகவிலையும் பொருட்படுத்தாமல் அதிகளவிலான ஆடுகளை வாங்கிச் சென்றனர்.       


Tags : Amman temple festival ,Viralimala , Viralimalai, festival, goat, merchants, joy
× RELATED பாலக்காட்டில் நாளை பகவதி அம்மன் கோவில் திருவிழா