×

தெலுங்கானாவில் மினிவேன் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் பலி!: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி..!!

காமரெட்டி: தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் மினி வேன் மீது லாரி மோதிய கோர விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் நிஜாம் சாகர் மண்டலத்தில் உள்ள ஹசன்பள்ளி கேட் என்ற இடத்தில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த லாரியும், மினி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் நிகழ்விடத்திலேயே மரணமடைந்தனர். படுகாயமடைந்த 20 பேரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த கோர விபத்தில் இறந்தவர்கள் பெரும்பாலும் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். விபத்து நடந்ததும் லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே விபத்து குறித்து தமது ஆழ்ந்த இரங்கலை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரண தொகை வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


Tags : Telangana ,PM , Telangana, minivan - lorry, accident, death, relief, Prime Minister Modi
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து