×

உக்ரைனுக்கான ஆதரவை உறுதி அளிக்கும் விதமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க ஜி7 நாடுகள் உறுதி.!

கீவ் : உக்ரைனுக்கான ஆதரவை உறுதி அளிக்கும் விதமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்பாக ஜி7 கூட்டமைப்பின் தலைவர்கள் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினர். அப்போது ரஷ்யா - உக்ரைன் போரை வெகு விரைவில் முடிவுக்கு கொண்டும் வரும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர ஜி7  முயற்சி எடுக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர்.

பெரும்பான்மை நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகிப்பாளராக இருப்பதே ரஷ்யாவின் அதிகாரப்போக்கிற்கு காரணம் என்றும் பேசப்பட்டது. இதையடுத்து உக்ரைன் மீது தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தடை செய்ய ஜி7 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக முடிவு செய்துள்ளனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கான ஆதரவை உறுதிப்படுத்த ஜி7 தலைவர்கள் இந்த முடிவினை எட்டியுள்ளனர். உக்ரைனுக்கு எதிரான போரில் புதின் வெற்றி பெறுவதை தடுக்க ரஷ்யாவிற்கு பொருளாதார நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு படிப்படியாக தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜி7 கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : G7 ,Russia ,Ukraine , Ukraine, Russia, crude oil, imports, embargo, G7 countries
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...