×

கொடூரமான போர் குற்றங்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் தான் பொறுப்பேற்க வேண்டும் : உக்ரைனில் கனடா பிரதமர் தாக்கு!!

கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.ரஷ்யாவின் 70 நாட்களுக்கும் மேலான தீவிர தாக்குதலில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் அனைத்தும் சிதிலம் அடைந்துள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் ஆயுத உதவியுடன் ரஷ்ய படைகளை எதிர்த்து முடிந்தவரை உக்ரைன் ராணுவம் போராடி வருகிறது. போருக்கு பின் உக்ரைனை புனரமைக்க உதவுமாறு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உலக நாடுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் தலைநகர் கீவில் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.

உக்ரைன் தலைவருடனான செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ,உக்ரைனில் அழிக்கப்பட்ட இர்வின் நகரை பார்வையிட்டேன். ரஷியாவின் சட்டவிரோதப் போரின் கொடூரத்தை நான் நேரடியாகக் கண்டேன். கொடூரமான போர் குற்றங்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் தான் பொறுப்பேற்க வேண்டும். உக்ரைனுக்கு தேவையான உதவிகளை செய்ய கனடா தயாராக உள்ளது. ரஷ்யா செய்து வரும் படுகொலைகளால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு நீதி கிடைக்க கனடா துணை நிற்கும். இரக்கம் இல்லாமல் ரஷ்யா 73 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. கனடாவும் கனடா மக்களும் உக்ரைனுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம், என்றார். இந்த நிகழ்ச்சியில் ரஷ்ய படைகள் பல்வேறு நகரங்களில் புதைத்து வைத்து இருக்கும் கண்ணி வெடிகளை கண்டுபிடித்து அகற்ற உதவி வரும் பாற்றான் என்ற நாய்க்கும் அதன் பயிற்சியாளருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீர பதக்கம் வழங்கி கவுரவித்தார்.


Tags : President ,Vladimir Putin ,PM ,Ukraine , Russia, President, Putin, Ukraine, Canada, Prime Minister
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து...