ஜெர்மனியில் இலங்கைத் தமிழர்கள் கட்டியுள்ள முத்துமாரியம்மன் கோவில்!: குடமுழுக்கு விழாவில் ஏராளமானோர் சுவாமி தரிசனம்..!!

ஹன்னோவர்: ஜெர்மனியில் இலங்கைத் தமிழர்கள் இணைந்து கட்டியுள்ள முத்துமாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. ஹன்னோவர் என்ற இடத்தில் இலங்கை தமிழர்கள் முத்துமாரியம்மன் கோயிலை கட்டியுள்ளனர். அங்கு நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. காலை யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று பூர்ணாகுதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து விமான நிலையத்தை அடைந்தது.

மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் ஜெர்மன் ஸ்ரீகுமார் குருக்கள், இந்திய, இலங்கை சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். இதில், இலங்கை சிவாச்சார்யார்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து யாகங்கள் நடத்தப்பட்டு குடமுழுக்கு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், மேயர் தோமஸ் ஹிரைன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: