×

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு

சென்னை:சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தபாமக நிர்வாகி u உயிரிழந்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோவன் தெருவில் நீர் நிலைப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகளை கடந்த 29ம் தேதி முதல் நீதிமன்றம் உத்தரவுப்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள குடும்பத்தினருக்கு பெரும்பாக்கம் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இதே பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வருவதால் இந்த பகுதியிலேயே இடம் வேண்டும் என்றும் கூறி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இருந்தாலும், நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு பகுதிகள் இடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று காலை போலீசார் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இயந்திரங்களுடன் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அதையும் மீறி அதிகாரிகள் குடியிருப்புகளை இடிக்க முயன்றனர். அப்போது, அதே பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் வி.ஜி.கண்ணையன்(57) என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் அதிகாரிகள் வீட்டை இடிக்க முயன்றதால் திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத பொதுமக்கள் தீ பிடித்து எரிந்த கண்ணையனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



Tags : Raja ,Annamalaipuram ,Chennai ,Govindasamy , Chennai, Raja Annamalaipuram, Govindasamy, aggressor, arsonist
× RELATED சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள...