×

கான்வே அதிரடி அரை சதம் டெல்லியை வீழ்த்தியது சிஎஸ்கே

மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 91 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீசியது. ருதுராஜ், கான்வே இருவரும் சென்னை இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11 ஓவரில் 110 ரன் சேர்த்தது. கான்வே 27 பந்தில் அரை சதம் விளாச, ருதுராஜ் 41 ரன் எடுத்து (33 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். அடுத்து கான்வேயுடன் துபே இணைந்தார். இருவரும் அதிரடியை தொடர சிஎஸ்கே ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. கான்வே 87 ரன் (49 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்), ஷிவம் துபே 32 ரன் (19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ராயுடு 5 ரன், மொயீன் அலி 9 ரன் எடுக்க, உத்தப்பா டக் அவுட்டானார்.

சென்னை 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. கேப்டன் தோனி 21 ரன் (8 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), பிராவோ 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் அன்ரிச் 4 ஓவரில் 42 ரன்னுக்கு 3 விக்கெட் வீழ்த்தினார். கலீல் 2, மார்ஷ் 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் 17.4 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 117  ரன் எடுத்து 91 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மார்ஷ் அதிகபட்சமாக 25 ரன் (20 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். சர்துல் தாக்குர் 24 ரன், ரிஷபண்ட் 21  ரன் எடுத்தனர். சென்னை பந்துவீச்சில் மொயின் அலி 3 விக்கெட், சவுத்ரி, சிமர்ஷித் சிங், பிராவோ தலா 2 விக்கெட்,மகேஷ் தக்சனா1 விக்கெட் வீழ்த்தினர். சென்னை சூப்பர் கிங்ஸ் 2 புள்ளிகள் பெற்றது.

Tags : Conway Action ,Delhi ,CSK , Conway Action CSK beat Delhi by half a century
× RELATED குஜராத்தை சமாளிக்குமா டெல்லி? அகமதாபாத்தில் இன்று மோதல்