அப்போலோ மருத்துவமனையில் மகப்பேறு குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல்: மருத்துவ நிபுணர்கள், கர்ப்பிணிகள் பங்கேற்பு

சென்னை: சென்னை காரப்பாக்கம் அப்போலோ க்ரேடில் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் சார்பில், குழந்தைகள் பெற்ற தம்பதியினருக்கு, கருத்தரிப்பின் ஆரம்பகாலம் முதல் பிரசவத்திற்கு பிறகான தாய்மையின் ஆரம்பகால தேவைகளை பூர்த்தி செய்யும் மகப்பேறு திட்டம் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கருத்தரிப்பின்போது தம்பதியினரிடையே இருக்க வேண்டிய நம்பிக்கை மற்றும் பிரசவத்திற்கு தயாரான மனநிலை, பிறந்த குழந்தையை கவனித்துக் கொள்ளுதல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சியில் மகப்பேறு மருத்துவர்கள் ஜனனி ஐயர், கார்த்திகா தேவி, சௌமியா ராகவன், திவ்வியாம்பிகை, நித்யாபாபுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடினார். இதில் கர்ப்பிணிகள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் மற்றும் சிசு பராமரிப்பு நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மகப்பேறு மருத்துவர் ராஜஸ்ரீசங்கர் பேசுகையில், ‘‘சிசேரியன் இல்லாமல் வழக்கமான முறையில் மகப்பேறு நிகழ்வதற்கான விழிப்புணர்வையும், குழந்தைப் பேறின்போது ஆரோக்கியமான மனநிலை உருவாக்குவதற்கும், இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.’’ என தெரிவித்தார்.

Related Stories: