சு.வெங்கடேசன் எம்.பி தகவல் தமிழில் வினாத்தாள் இஸ்ரோ பரிசீலனை

மதுரை: தமிழகத்தில் இயங்கி வரும் விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாகம், பி மற்றும் சி பிரிவு ஆகிய இரண்டு பணி நியமன இடங்களுக்கு கடந்த மாதம் 10ம் தேதி தேர்வு நடந்தது. இலகுரக வாகன ஓட்டுநர், சமையலர் பதவிகளுக்கான கேள்வித்தாள்களில் மட்டுமே தமிழ் வடிவம் இடம் பெற்றிருந்தது. மற்ற பிட்டர், வெல்டர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுக்கான கேள்வித்தாள்கள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தமிழ் வடிவ கேள்வித்தாளுடன் மறு தேர்வை நடத்த வேண்டுமென விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாக இயக்குநருக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு அந்நிறுவனத்தின் இயக்குநர் அழகுவேலு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், ‘‘ மாநில மொழிகளிலும் எதிர்கால நியமனங்களில் தேர்வு நடத்த வழிகாட்டல் கேட்டு விண்வெளித்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: