கொரோனா பாதிப்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடெல்லி: கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேர நிலவரப்படி கொரோனா பாதிப்பு, பலி குறித்த அறிக்கையை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. அதில்,

* கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 3,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* மொத்த பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 2 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 64 ஆக அதிகரித்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளது.

* இதுவரை 190.20 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories: