திருப்பதியில் புதிய செயல் அதிகாரி பொறுப்பேற்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் புதிய செயல் அதிகாரியாக தர்மா ரெட்டி நேற்று பொறுப்பேற்றார். ஆந்திர மாநிலத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசின் தலைமைச் செயலாளர் சமீர் சர்மா நேற்று அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி, திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரியாக இருந்த ஜவகர் ரெட்டி முதல்வர் அலுவலகத்தின் முழு நேர தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,   திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரியாக இருந்த  தர்மா ரெட்டி செயல் அதிகாரியாக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, நேற்று ஏழுமலையான் கோயிலில் கருடாழ்வார் சன்னதி அருகே தர்மா ரெட்டியிடம் பொறுப்புகளை வழங்கி, ஜவகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இருவரும் இணைந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

Related Stories: