×

கான்வே அதிரடி அரை சதம் சூப்பர் கிங்ஸ் ரன் குவிப்பு

மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், டிவோன் கான்வேயின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. ருதுராஜ் கெயிக்வாட், டிவோன் கான்வே இருவரும் சென்னை இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11 ஓவரில் 110 ரன் சேர்த்தது. கான்வே 27 பந்தில் அரை சதம் விளாச, ருதுராஜ் 41 ரன் எடுத்து (33 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) அன்ரிச் பந்துவீச்சில் அக்சர் வசம் பிடிபட்டார்.

அடுத்து கான்வேயுடன் ஷிவம் துபே இணைந்தார். இருவரும் அதிரடியை தொடர சிஎஸ்கே ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. கான்வே 87 ரன் (49 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்), ஷிவம் துபே 32 ரன் (19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ராயுடு 5 ரன் எடுத்து கலீல் பந்துவீச்சில் அக்சரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மொயீன் அலி 9 ரன் எடுக்க, உத்தப்பா டக் அவுட்டானார். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. கேப்டன் எம்.எஸ்.தோனி 21 ரன் (8 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), பிராவோ 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் அன்ரிச் 4 ஓவரில் 42 ரன்னுக்கு 3 விக்கெட் வீழ்த்தினார். கலீல் அகமது 2, மிட்செல் மார்ஷ் 1 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து, 20 ஓவரில் 209 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது.


Tags : Conway Action Half-Century Super Kings Run Accumulation
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...